நடிகை சமந்தாவா இது? ஆச்சரியத்தை ஏற்படுத்தி ஆர்மி கெட்டப்பில் வெளியான வீடியோ..

தமிழ் சினிமாவில் பானா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அதன் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார்.

   

தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் 5ல் இருந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். தற்போது நடிகைகளுக்கு முக்கியத்தும் கொடுக்கும் படங்களில் நடித்தும் வருகிறார். இந்நிலையொல் வெப்சீரிஸ் படங்களிலும் நடித்து வரும் சமந்தா, தி ஃபேமிலி மேன் 2 படத்தில் நடித்துள்ளார்.

அப்படத்தில், சமந்தா, பிரியாமணி, மனோஜ் பாஜ்பாய் போன்றோர் நடிப்பில் அமேசான் தளத்தில் வெளியாக இருக்கிறது. அப்படத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.