90ஸ் களில் ரசிகர்களில் கனவு கன்னியாக வளம் வந்தவர் நடிகை சிம்ரன். தனது அழகான டேன்ஸினாலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. ஒன்ஸ்மோர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆன சிம்ரன் புகழின் உச்சத்தில் இருந்தவர். தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சிம்ரன். விஜய், அஜித், கமல் ஹாசன், மற்றும் சமீபத்தில் ரஜினிகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
தமிழ் திரையுலகில் பிஸியாக இருந்தபோதே, தீபக் என்ற தன் நண்பரை காதலித்து திருமணம் செய்தார். திருமணத்துக்கு பின்னர் ஏற்கனவே தான் கமிட் ஆகியிருந்த உதயா திரைப்படத்தில் மட்டும் நடித்தார் சிம்ரன். ஹீரோயினாக கலக்கிய சிம்ரன், சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படத்தில் வில்லியாகவும் கலக்கினார். அதன்பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரஜினியின் பேட்ட திரைப்படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆனார் சிம்ரன்.
கடந்த 2003ல் திருமணம் செய்துகொண்ட சிம்ரனுக்கு இப்போது ஆதீப், ஆதித் என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அண்மையில் நடிகை சிம்ரன் மேக்கப் இல்லாமல் தனது படத்தை சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் நரைமுடியில் இருக்கிறார் சிம்ரன். சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிகை சிம்ரன் அதில் நரைமுடியோடு இருக்கிறார். அதைப் பார்த்த ரசிகர்கள் நடிகை சிம்ரனுக்கு இவ்வளவு வயதாகிவிட்டதா? என கமெண்ட் செய்து வருகின்றனர்.