
நடிகை சோனியா அகர்வாலின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தெலுங்கு திரை உலகில் அறிமுகமாகிய பின்னர் தமிழில் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை சோனியா அகர்வால். முதல் படத்திலிருந்து இயக்குனர் செல்வராகவனும் இவரும் காதலிக்கத் தொடங்கினர். இதனை உடனடியாக அவர்கள் வெளிப்படுத்தவில்லை. ஆனாலும் தொடர்ந்து இவர்களை பற்றி சில காதல் கிசுகிசுக்கள் வந்து கொண்டே இருந்தன.
இதை தொடர்ந்து 7G ரெயின்போ காலனி, மதுர, கோவில், திருட்டுப்பயலே என தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்தார். புதுப்பேட்டை படத்திற்கு பின்னர் இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படுத்தி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். 2006ல் செலவரகவானை திருமணம் செய்து கொண்ட பின் சோனியா அகர்வால் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.
இதை தொடர்ந்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட 2010ல் முறையாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்து பெற்று 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இவர் தனித்தே வாழ்ந்து வருகிறார். தற்பொழுது படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகை சோனியா அகர்வால் உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ”நம்ம சோனியா அகர்வாலா இது?” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்…