நடிகை தமன்னாவுக்கு விரைவில் டும் டும் டும்…. மாப்பிள்ளை இவர்தானா?… தீயாய் பரவும் தகவல் இதோ….

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினான நடிகை தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் தான் நடிகை தமன்னா. இவர் ‘கேடி’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தமிழில் கல்லூரி, படிக்காதவன், வீரம், அயன், தேவி என பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

   

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் தொடர்ந்து நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஆனால் சமீப காலமாக இவர் படங்களின் நடிப்பதை குறைத்துக் கொண்டு வருகிறார். இதற்குக் காரணம் அவரது திருமணம் தான் என்று தகவல் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வருகிறது.

நடிகை தமன்னா ‘தனது வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை தான் திருமணம் செய்து கொள்வேன்’ என்று ஏற்கனவே பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்நிலையில் நடிகை தமன்னா மும்பையைச் சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்ற தகவல்  சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இது போன்ற தகவல்கள் எப்பொழுது இணையதளங்களில் வெளியானாலும் நடிகை தமன்னா உடனே அதற்கு விளக்கம் அளித்து விடுவார். ஆனால் தற்பொழுது அவர் மௌனம் காத்திருப்பது அவரது திருமணத்தை உறுதி செய்வதை போலத்தான் உள்ளது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.