நடிகை நதியாவின் அம்மாவா இது..? அட நம்பவே முடியலயே : அதுவும் மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் என்று பாருங்க

தமிழ் திரையுலகில் கடந்த 90களில் பிரபல நடிகையாக இருந்த நடிகை நதியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அன்னை மற்றும் மாமியாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

   

அந்த புகைப்படத்தில் அவர் ’அம்மா மற்றும் மாமியார் ஆகிய இருவருக்கும் எனது அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் என்றும் அவர்களுடைய அன்பு என்றும் தனக்கு இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நதியா கடந்த 1988ஆம் ஆண்டு சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார்.

அவருக்கு சனம் மற்றும் ஜனா ஆகிய 2 மகள்கள் அடுத்தடுத்து பி றந்தனர்.இதனை அடுத்து மீண்டும் ’எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆன நதியா தற்போது வரை சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும், தற்போது தெலுங்கில் உருவாகி வரும் ’த்ரிஷ்யம் 2’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.