கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் அனைத்து ரசிகர்களை கவர்ந்தவர் பிரியா பவானி சங்கர். அதன் பின்னர் பல்வேறு தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கினார். தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்து சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். தமிழ் சினிமாவில் மேயாத மான் படத்தின் மூலம் நடிகையாக காலடி பதித்தார்.
தமிழ் சினிமாவில் இளம் நாயகிகள் அதிகம் அங்கீகரிக்கப்பட்டு வருகிறார்கள். அதில் ஒருவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். இதையடுத்து பல படங்களில் நடிக்க கமிட்டாகினார். மாஃபியா, மான்ஸ்டர், பொம்மை என போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது நடிகர் மற்றும் டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸுடன் ருத்ரன் என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
நடிகை பிரியா பவானி ஷங்கர் ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். அவரே நான் நிறைய படங்களில் நடிக்கிறேன் ஆனால் வெளியே வரவில்லை என்று கூறியிருந்தார். எப்போதும் வித்தியாசமான போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை அசத்தும் வருவார் அவர். இப்போது ராணி போல் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் பிரியாவா இது என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.
View this post on Instagram