நடிகை வனிதா விஜயகுமாரை இப்படி இதுவரை நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க…. என்ன கொடுமைடா இது…. வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ இதோ….

நடிகை வனிதா விஜயகுமாரின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகள் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் 1995 இல் வெளியான ‘சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நட்சத்திரமாக விளங்குகின்றார்.

   

 

இவர்  பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக அதிக அளவில் பேசப்பட்டவர். அந்த ஷோவில் நடந்த பல பிரச்சனைகளுக்கு வனிதாவின் பேச்சு தான் காரணம் என குற்றச்சாட்டு இருந்தாலும், அந்த சீசன் அதிக டிஆர்பி பெறுவதற்கு அவர் முக்கியமாக காரணமாக இருந்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

நடிகை வனிதா தொழிலதிபர் ஆனந்த ஜெய் ராஜன் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. பின் இவர்கள் சட்டப்படி விவாகரத்து செய்து கொண்டனர். இவர் தொடர்பான எந்த செய்தி வெளிப்பட்டாலும் அந்த செய்தி உடனே வைரலாகி விடுகிறது.

தனது சொந்த வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் தன்னுடைய மகள்களை சொந்தக் காலில் நின்று பார்த்துக் கொண்டு வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை வனிதா. இவர் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ….