குக்கு வித் கோமாளி என்பது விஜய் தொலைக்காட்சியில் 2019 நவம்பர் 16, முதல் 2020 பிப்ரவரி 23, வரை சனிக்கிழமை மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியை ரக்சன் மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகிய இருவரும் தொகுத்து வழங்க சமையல் கலை நிபுணர்களான செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷன் பட் ஆகியோர்கள் தலைவராக உள்ளார்கள்.
இந்த சமையல் நிகழ்ச்சியில் பிரபலங்கள் சமையல் செய்ய, விஜய் தொலைக்காட்சியின் நகைச்சுவை நடிகர்களும் அவர்களுடன் பங்கு பெறுவார்கள்.ஆனால் உதவியாக அல்ல, சில கோமாளித் தனங்கள் செய்து பார்வையாளர்களை சிரிக்க வைப்பதற்காக.
இதற்கு நடுவில் தலைவர்கள் கொடுக்கப்படும் நேரத்தில் சமைக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியின் இறுதி அத்தியாயம் 2020 பிப்ரவரி 23 ஆம் ஆண்டு பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகி 14 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளர் வனிதா விஜயகுமார்.
இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருப்பவர்கள் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு ஆகியோர் என்று அனைவருக்குமே தெரிந்த ஒரு தகவல் தான் , இவர்கள் இருவரும் சாதரணமாகவே எந்த ஒரு நிகழ்ச்சியிலும் ஜாலியாகதான் பயணிப்பார்கள் , அப்படி இருக்க இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளுக்கு பஞ்சமே இருந்தது இ ல்லை. இந்த நிகழ்ச்சியில் கேலி கி ண்ட ல்களுக்கு பஞ்சமே இருக்காது . குறிப்பாக தாமு சார் லூட்டிக்கு சமையல் குடும்பமே சிரித்து குலுங்கும் என்று தான் சொல்ல வேண்டும் .
இதுவரை சமையல் வீடியோக்கள் மட்டுமே தனது இன்ஸ்டா பக்கத்தில் நடுவர் தாமு பதிவு செய்து வந்து இருந்தார் தற்சமயம் அவர் அவரது மகள்கள் புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார் .அதனை பார்த்த ரசிகர்கள் அட நம்ப நடுவர் தாமுவின் மகள்களா என்று ஆச்சிர்யத்தில் ஷாக் ஆகி வருகின்றனர் .