நம்ம தளபதி கையில் இருக்கிற இந்த குழந்தை யாரு தெரியுமா..? அட இவரும் ஒரு நடிகர் தான்

தமிழ் சினிமாவின் நம்பிக்கையான உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் தளபதி விஜய்.இவர் நடிப்பில் தற்போது தளபதி 65 படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் வெளிநாட்டில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

மேலும் இப்படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து முன்னணி தெலுங்கு நடிகை பூஜா ஹேக் டே நடிக்கவிருக்கிறார்.

அனிருத் இசையில் உருவாகி வரும் தளபதி 65 திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக பெரிதும் வாய்ப்புகள் அதிகம் என தெரிவிக்கின்றனர்.அந்த வகையில் தற்போது தளபதி விஜய், ஒரு குழந்தையை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.விஜய்யின் மகன் சஞ்சய் தான்.

ஆம் சஞ்சய் தனது தந்தை விஜய்யுடன் சிறு வயதில் எடுத்த புகைப்படம் தான் இது.விஜய்யின் மகன் சஞ்சய் குறும் படம் ஒன்றில் நடிகராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.