நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் நடிகை அனிஷாவுடன் திருமணம் நின்றது ஏன்? முதன்முறையாக காரணத்தை கூறிய விஷால்!

செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் சண்டக்கோழி, திமிரு போன்ற அதிரடி படங்களின் மூலம் மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றார். விஷால் தெலுங்கு பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ஜி.கே ரெட்டியின் மகனாவார். தொடர்ந்து ஆக்சன் படங்களிலேயே நடித்து வந்த விஷால் பாலாவின் இயக்கத்தில் அவன் இவன் படத்தின் மூலம் தனது நடிப்புத்திறமையின் வேறு பரிமாணத்தை வெளிகாட்டினார்.

   

தமிழ் சினிமாவில் மாற்றங்களை கொண்டுவர எண்ணி திரைப்பட நடிகர் சங்க செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருந்து வருபவர் நடிகர் விஷால். நடிகர் விஷாலுக்கு கடந்த வருடம் தெலுங்கு நடிகையான அனிஷாவுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்தவித சத்தமும் இல்லாமல் இருவரும் பிரிந்து விட்டனர்.

இதற்கான காரணம் தெரியாமல் இருந்த நிலையில், அனுஷாவிற்கு சில தினங்களுக்கு முன்னர் வேறொருவருடன் நிச்சயதார்த்தம் முடிந்தது. இதனிடையே, தற்போது தன்னுடைய திருமணம் நின்று போனதற்கான காரணம் என்ன என நடிகர் விஷால் கூறியுள்ளார். அதில், “என்னுடைய திருமண விஷயத்தில் சில விஷயங்கள் கை மீறிச் சென்று விட்டன. தற்போதைக்கு நான் சிங்கிள் தான் மிங்கிளாக ரெடி” என தெரிவித்துள்ளார்….