நீங்கள் கேட்ட பாடல் விஜய் சாரதி தற்போதைய நிலைமை தெரியுமா..?? எப்படி இருந்தா மனுஷன் எப்படி ஆகிட்டரே..!!

சின்னதிரையை பொருத்தவரையில் நடிகைகள், நடிகர்கள் மட்டுமின்றி ஒரு காலத்தில் தொகுப்பாளர்களும் பிரபலமாக இருந்தார்கள். அதில் ஒருவர் தான் விஜய் சாரதி. நீங்கள் கேட்ட பாடல் விஜய் சாரதி என்று சொன்னால் தான் எல்லாருக்கும் தெரியும். இவர் பிரபல ரிவியில் ஒளிபரப்பான மர்மதேசம் சீரியலில் நடித்தார்.

   

இவர் முதன்முதலில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிதான் நீங்கள் கேட்ட பாடல். இந்த நிகழ்ச்சியில் அவர் பல ஊராக சென்று அங்குள்ள சிறப்புகளை பற்றி பேசுவதோடு, பின்னால் சென்று கொண்டே பேசுவார். இந்த நிகழ்ச்சியை இந்தியாவில் மட்டுமின்றி பல வெளிநாடுகளிலும் செய்தனர்.

பின் நடிகராக நடிக்க வாய்ப்பு கிடைத்து பவளகொடி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு சித்தி, கோலங்கள், விக்கரமாதித்யன் சீரியல்களில் நடித்துவந்தார். மேலும் பல நேர்க்காணல் நிகழ்ச்சிகள் செய்துள்ளார்.

இவர் கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சைத்தான் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.

தற்போது சன் டிவியில் சேனலில் தலைமையாளராக இருக்கும் இவர் தொகுப்பாளர் வேலையை மிகவும் மிஸ் செய்கிறாராம். இவர் தற்போது மனைவி குழந்தைகளிடன் சென்னையில் தான் வாழ்ந்து வருகிறார்.