நீங்கள் போட்டிருக்கும் மாஸ்க் கொரோனாவில் இருந்து காப்பாற்றுமா? உங்கள் மாஸ்க் காக்குமா? சூப்பராக விளக்கும் வீடியோ இதோ..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவிவருகிறது. இதன் காரணமாக பொதுமக்களிடம் அரசு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. சோசியல் டிஸ்டன்ஸ் விட்டு வீதிகள், கடைகளுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், முகக்கவசம் இன்றி வெளியே வரும் மக்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது,

   

மக்கள் இன்று பலரும் மாஸ்க் போடுவதை வழக்கமாகவே வைத்திருக்கின்றனர். ஆனாலும் அவர்கள் பயன்படுத்தும் மாஸ்க் தரமானது தானா? என்னும் கேள்வி எழுந்துள்ளது. பேஸ்மாஸ்க், கொரோனாவை ஒழிக்கும். அதேபோல் சமூக இடைவெளியும் கைகொடுக்கும் அதேநேரத்தில் மாஸ்கை நாம் தேர்ந்தெடுப்பதிலும் கொரோனாவில் இருந்து தப்பிக்கொள்ளும் சூத்திரம் இருக்கிறது.

அதன்படி நாம் வெறுமனே துணியை முகத்தில் கட்டிக்கண்டு செல்வதையோ, அல்லது வேறு சில மாஸ்க்களை பயன்படுத்துவதையோ விட ஆஸ்பத்திரியில் பயன்படுத்தப்படும் சர்ஜிக்கல் ஆப்ரேசன் மாஸ்க் நல்ல பலனைக் கொடுக்கும். இதோ நீங்களே இந்த காட்சியைப் பாருங்கள். உங்களுக்கு எளிதில் புரியும். வீடியோ இதோ…