
பிரபல தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய ஷோவான நீயா நானா மூலம் அறிமுகமாகி தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர் கோபிநாத் அவர்கள்.நீயா நானா கோபிநாத் என்றால் தெரியாதவர் யாரும் இல்லை.இவர் தமிழ் சின்னத்திரைக்கு வருவதற்கு முன் இவர் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி இருக்கிறார்.
பின்பு அப்படியே இவரது பேச்சு திறமையால் மக்கள் மத்தியில் பேசப்பட்டு நீயா நானா மக்கள் கருத்து கூறும் ஷோவை தொகுத்து வழங்க தொடங்கினர். இவருக்கு இந்த நீயா நானா ஷோ மூலம் பல தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர்.இவர் வீ ஜே வாக மட்டுமல்லாமல் சில புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
இதனால் பெரிய அளவில் பிரபலம் அடைந்த இவர் சிறுது கூட தலைக்கனம் இல்லாத தொகுப்பாளராகவும் ,நல்ல மனிதராகவும் திகழ்கின்றார் , இவரின் மனைவியை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை ஏன் என்றால் அவரை பற்றின எந்த ஒரு தகவல்களையும் இவர் பொது இடங்களில் கூறியதில்லை ஆனால் தற்போது அவர்களின் புகைப்படங்களே இணையத்தில் வெளியாகியுள்ளது .,