
‘லவ் டுடே’ திரைப்பட ஹீரோயின் இவானா சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது கண் கலங்கி அழுதுள்ளார். இதற்கான காரணம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான ‘நாச்சியார்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இவானா. தொடர்ந்து இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கான சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இவர் முதன் முதலில் மலையாள திரையுலகில் தான் அறிமுகமானார்.
இதை தொடர்ந்து தற்பொழுது ‘லவ் டுடே’ படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்பொழுது உள்ள இளைய சமுதாயத்தில் காதலில் எப்படி பார்க்கப்படுகிறது என்பதை இப்படம் காட்டுகிறது. காதல் ஜோடிகள் செல்போனை மாற்றிக் கொண்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை தெள்ளத் தெளிவாக காட்டுகிறது.
லவ் டுடே திரைப்படத்தின் மூலம் தற்போது புகழின் உச்சிக்கே சென்றுள்ளார் நடிகை இவானா. இத்திரைப்படம் தமிழில் மட்டும் இன்றி தெலுங்கிலும் பெரிய ஹிட் ஆகியுள்ளதால் தற்பொழுது முன்னணி ஹீரோயினாக மாறி உள்ளார் இவானா. சமீபத்தில் இவானா சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கண்கலங்கி அழுதுள்ளார்.
இதற்கு காரணம் அவரது ட்வின் சகோதரர் என்று கூறப்படுகிறது. நடிகை இவானாவும் மற்றும் அவரது சகோதரர் இருவரும் இரட்டையர்களாம். ஒருவருக்கு உடல்நிலை சரி இல்லை என்றால் இன்னொருவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார் இவானா. 12-ம் வகுப்பு படித்த பிறகு அவர் வெளிநாட்டிற்கு சென்று விட்டார் எனவும், இதனால் அவரை மிஸ் செய்வதாக கூறி இவானா கண்கலங்கியுள்ளார்.
இதோ அவரது சகோதரரின் புகைப்படங்கள்…