பச்சிளம் குழந்தையுடன் இரு பேருந்துகளுக்கு இடையே சிக்கிக் கொண்ட தம்பதி..! நெஞ்சை பதற வைக்கும் CCTV காட்சி.

இரு சக்கர வாகனத்தில் மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் சென்ற நபர் பேருந்துகளுக்கு இடையே சிக்கிய சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. புதுச்சேரியை சேர்ந்த கல்மண்டபம் கிராமத்தில் இருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற இரு பேருந்துகளுக்கு இடையே டூவீலர் வாகனத்தில் சென்ற , மனைவி, தனது கைகுழந்தையுடன் சென்றுள்ளனர்.

   

அதுப்போது எதிரே மற்றொரு பேருந்து விழுப்புரத்தை நோக்கி வந்த நிலையில், அந்த டூவீலர் வாகனம் பேருந்தை முந்த பார்க்கும் பொழுது இரு பேருந்துகளுக்கு இடையே சிக்கி கொண்டது. இதில் டூவீலர் வாகனம் மட்டும் சற்று பழுதடைந்த நிலையில், அதில் இருந்த தாய், தந்தை மற்றும் கைக்குழந்தை மூவரையும் நூலிழையில் தப்பினர்.

இதைத்தொடர்ந்து, தனது பேருந்தை முந்த முயன்ற தனது கணவனை திட்டியபடியே மனைவி குழந்தையுடன் நகர்ந்து சென்றார். டூவீலர் வாகனத்தை ஓட்டிய நபர், எதிரே வந்த பேருந்தின் வேகத்தை கவனிக்காமல் முந்தியதால் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.வைரலாகும் அவ்வீடியோ பதிவு இதோ