பணத்தை பத்திரமா வச்சுக்கோங்க….. பத்திரமா செல்லுங்க…. பேருந்து பயணிகளுக்கு அறிவுரை வழங்கிய காவல் ஆய்வாளர்…. வைரல் வீடியோ….!!!

பணத்தை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் பத்திரமாக டிராவல் செய்ய வேண்டும் என்று பேருந்து பயணிகளுக்கு காவல் ஆய்வாளர் பேருந்தில் ஏறி பயணிகளுக்கு அறிவுரை கூறிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் நாள்தோறும் பல வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

 

ஒரு சில வீடியோக்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கும். அந்த வகையில் தான் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாக காவல் ஆய்வாளர்கள் தங்கள் அலுவலகத்திற்கு புகார் என்று வரும் கம்பளைன்களை மட்டும் பார்ப்பார்கள். அதை மட்டுமே தீர்த்து வைப்பார்கள்.

ஆனால் இங்கு ஒரு காவல் ஆய்வாளர் அரசு பேருந்தில் ஏறி பயணிகள் இடையே உரையாற்றுகிறார். அவர் பேருந்தில் நிறைய திருட்டு நடக்கின்றது. திருட்டு நடப்பதற்கு நம்முடைய அஜாக்கிரதை தான் காரணம். எனவே நம் பத்திரமாக பொருட்களை வைத்துக் கொள்ள வேண்டும். பத்திரமாக டிராவல் பண்ணுங்க என்று பயணிகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…