பல கோடி கடன், சொந்த வீட்டை விற்கும் நிலை.. கண்ணீர்விடும் நடிகர் கஞ்சா கருப்பு! காரணம் என்ன?

தமிழ் சினிமாவில் எப்பொழுதும் மற்ற நடிகர் நடிகைகளுக்கு பஞ்சம் இருந்தாலும் இந்த காமெடி நடிகர்களுக்கு எப்பொழுதும் பஞ்சம் இருந்ததில்லை. இப்படி சீசனுக்கு சீசன் பொழுதும் எதாவது ஒரு காமெடி நடிகர்கள் கலக்கி வருவார்கள். இப்படி அறிமுகமாகும் காமெடி நடிகர்களும் திடிரென முளைத்து வருவதில்லை ஏற்கனவே பல படங்களில் துணை நடிகர்களாகவும் துணை காமெடி நடிகர்களாகவும் நடித்திருந்தால் மட்டுமே இவர்களுக்கும் அடுத்தடுத்து வாய்ப்புகள் வரும்.

   

அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி அறிமுகமாகி வெற்றியடைந்த படம் பருத்திவீரன் படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக பிரபலம் ஆனார் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு. விக்ரம் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான பிதாமகன் படத்தில் அறிமுகமானார் இவர். அடுத்தடுத்து படங்கள் நடித்துவந்த அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்துகொண்டார்.

படங்கள் நடித்து சந்தோஷமாக இருந்த கஞ்சா கருப்பு சினிமாவில் ஒரு பெரிய விஷயத்தில் நுழைய கடன், சொந்த வீட்டை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். அதாவது கஞ்சா கருப்பு வேல்முருகன் போர்வெல் என்ற படத்தை தயாரிக்க அப்படம் படு தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் அதிக கடன், வீட்டை விற்று கடும் சோகத்திற்கு ஆளாகியுள்ளார். இனிமேல் தான் படம் தயாரிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.