பாக்யலட்சுமி சீரியல் நடிகைக்கு 19 வருடங்களுக்குப் பிறகு பிறந்த தங்கச்சி பாப்பா! மகிழ்ச்சியுடன் வெளியிட்ட வீடியோ

சன் தொலைக்காட்சியில் தான் அதிகபடியான சீரியல்கள் ஓடுகிறது, இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த தொலைக்காட்சியில் கடந்த 2013ம் ஆண்டு ஒளிபரப்பாகி இல்லதரசிகளின் மிகப்பெரிய ஆதரவை பெற்றது வாணி ராணி சீரியல். ராதிகா இரட்டை வேடங்களில் நடித்து அவரே தயாரித்த இந்த சீரியல் 5 வருடங்கள் ஓடியது. இந்த சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்தவர் தேனு. இவரின் நிஜ பெயர் நேஹா.

பைரவி என்ற சீரியல் மூலம் அறிமுகமான இவர் அதன்பிறகு பிள்ளை நிலா, வாணி ராணி போன்ற சீரியல்களில் நடித்து வந்தார். தற்போது விஜய்யில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். 19 வயதாகும் இவருக்கு இப்போது ஒரு தங்கை பிறந்துள்ளார். இந்நிலையில் தனது தாய் கர்ப்பமாக இருந்ததாகவும், தற்போது அவருக்கு பெண் குழந்தையை பிறந்திருப்பதாகவும், அம்மாவும் தங்கையும் மருத்துவமனையில் நன்றாக இருக்கிறார்கள் எனவும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துக் கொண்டுள்ளார் நேகா.

நேஹா 2002-ஆம் ஆண்டில் பிறந்தார். அந்த வகையில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சகோதரியைப் பெற்றுள்ளார். மேலும் தான் ஒரு தாயைப் போல உணர்வதாகவும், தங்கையை வளர்க்க காத்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதை ட்ரோல் செய்பவர்களுக்கு “இந்த செய்திக்கு கிடைக்கும் குப்பை பதில்களுக்கு, நான் எதுவும் செய்யப்போவதில்லை. எனவே உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்” எனக் கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *