பாசத்துக்கு முன்பு பணம் ஒரு விஷயமே இல்லை..! மனதை உருக வைக்கும் காட்சி

கொரோனா காலம் நமக்கு பல வாழ்வியல் யதார்த்தத்தையும் கற்றுக்கொடுத்துக் கொண்டு இருக்கிறது. அரசு திடீரென கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த லாக்டவுண் போட்டு வருவதால் உண்மையில் ரொம்பவே கஷ்டப்படுவது சாலையோரவாசிகள் தான். சொந்தமாக வீடு இல்லாத அவர்கள் சாலையோரம் இருப்பார்கள். அந்தப்பக்கமாக போய், வருபவர்கள் கொடுக்கும் பணத்தை வைத்துதான் உணவு சாப்பிட்டு வயிற்றை நிரைப்பார்கள்.

ஆனால் இப்போது கொரோனா காலம் என்பதால் சாலையோரம் தர்மம் எடுப்போருக்கும் உணவு கிடைப்பதில்லை. மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதும் குறைந்திருப்பதால் சாலையோரம் தர்மம் எடுப்போர் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். அதுபோன்றவர்களுக்கு ஆங்காங்கே இருக்கும் இளைஞர்கள் தான் தன்னார்வலர்களாக உணவு கொடுத்து வருகின்றனர். இங்கேயும் அப்படிதான். இந்த காட்சியை பாருங்க நீங்களே உருகிடுவீங்க..