பாடகர் உன்னி கிருஷ்ணனின் மனைவியை பார்த்துள்ளீர்களா? இவ்வளவு அழகா! புகைப்படம் இதோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து ரியாலிட்டி ஷோக்களும் மிகவும் பிரபலம். அதிலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மக்கள் பேராதரவுடன் பல சீசன்கள் கடந்து வெற்றிகரமாக ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் தொகுத்து வழங்கி வரும் மாகாபா, ப்ரியங்கா இருவருக்கும் சின்னத்திரை ரசிகர்களுக்கு எப்போதுமே மிகவும் பிடித்த தொகுப்பாளர்கள் தான். சீசன் 1ல் இருந்து 8 வரை மக்களில் வரவேற்பில் வளர்ந்து வந்துள்ளது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி.

   

இதில் தற்போது 8வது சீசன் துவங்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. பல ஆண்டுகளாக மக்களின் ரசனைக் கேட்ப நிகழ்ச்சிகளை இயக்கி வருபவர் தான் விஜய் டிவி நிகழ்ச்சிகளின் இயக்குனர் ரவூபா அவர்கள். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் முதலில் இருந்தே இந்த நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வரும் ஒரு பிரபலம் பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன்.

இவர் தமிழில் வெளியான பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பாடியுள்ளார். மேலும் இவர் பாடிய முதல் பாடலுக்கே தேசிய விருதை வென்றுள்ளார். உன்னி கிருஷ்ணனின் மகள் பின்னணி பாடகி உத்ரா உன்னி கிருஷ்ணனை பார்த்திருப்போம். இந்நிலையில் பாடகர் உன்னி கிருஷ்ணனின் மனைவியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..