விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களும் மிகவும் பிரபலம். அதிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கென்று ஓர் பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக ஒளிபரப்பபட்டு வருகிறது. இந்த தொடரில் கதிர் மற்றும் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜோடி தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஜோடியாக இருந்து வருகின்றனர்.
தமிழில் பெரிய ஹிட்டாகியுள்ள இந்த சீரியல் தற்போது ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என முக்கிய மொழிகளிலில் ரீமேக் செய்துள்ளனர். இதில் நடிக்கும் பிரபலங்கள் அனைவருமே மக்களிடம் பெரிய வரவேற்பை பெறுகின்றனர். ஒரு சின்ன காட்சியில் நடித்தாலும் அந்த நடிகருக்கு மக்களிடம் அங்கீகாரம் கிடைக்கிறது. அப்படி இந்த சீரியலில் ஐஸ்வர்யா வேடத்தில் நடித்திருந்தவர் வைஷாலி.
நன்றாக தான் நடிப்பார், ஆனால் இவருக்கு பதிலாக தற்போது வேறொரு நடிகையை நடிக்க வைத்துள்ளனர் சீரியல் குழுவினர். இதுகுறித்து ரசிகர்கள் வைஷாலி திலகாவிடம் கேள்வி கேட்க, அதற்கு அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஏன் நடிக்கவில்லை என பலர் கேட்கிறீர்கள். அதற்கு பதில் என்னிடமும் இல்லை, என்னை ஏன் சீரியல் குழுவினர் நடிக்க வைக்கவில்லை என எனக்கே தெரியவில்லை என பதில் அளித்துள்ளார்.