பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யாவா இது? துளியும் மேக்கப் இல்லாமல் எவ்வளவு அழகாக இருக்கிறார் பாருங்க!

விஜய் தொலைகாட்சித்தியில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் பிரபலமான மெகா சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடருக்கென்று பாண்டியன் ஸ்டோர்ஸ் ஓர் பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக ஒளிபரப்பபட்டு வருகிறது. இந்த தொடரில் கதிர் மற்றும் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜோடி தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்ற ஜோடியாக இருந்து வருகின்றனர்.

   

இத்தொடரில் வரும் தனம், கதிர், முல்லை, மீனா என அணைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். அதிலும் முல்லை கதிர் கதாபாத்திரத்திற்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. சமீபத்தில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சின்னத்திரை நடிகை தற்கொலை செய்து கொண்டார். இவரின் மறைவிற்கு பிறகு, இந்த முல்லை என்னும் கதாபாத்திரத்தில் இளம் சின்னத்திரை நடிகை காவ்யா அறிவுமணி நடித்து வருகிறார்.

இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு முன் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கதாபாத்திரத்தின் மூலம் சின்னத்திரையில் நடிகை காவ்யாவிற்கு மிகப்பெரிய பிரபலம் கிடைத்துள்ளது. இந்நிலையில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காவ்யா, கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் அழகிய புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..