பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யாவின் தங்கையை பார்த்துள்ளீர்களா? அச்சு அசல் அக்கா போலவே இருக்கிறாரே..!

விஜய் தொலைகாட்சித்தியில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் பிரபலமான மெகா சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடருக்கென்று ஓர் பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக ஒளிபரப்பபட்டு வருகிறது. இத்தொடரில் வரும் தனம், கதிர், முல்லை, மீனா என அணைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம்.

   

குடும்பங்களை கவர்ந்த இந்த சீரியலில் இதுவரை ஒரே ஒரு முக்கிய நடிகர் மாற்றம் மட்டும் நடந்தது. அதுவும் நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டு இறந்ததால் அவருக்கு பதிலாக காவ்யா என்கிற நடிகை இடம்பெற்றார். அவர் இந்த சீரியலுக்கு வருவதற்கு முன் பாரதி கண்ணம்மா சீரியலில் நாயகன் தங்கையாக நடித்து வந்தார். தற்போது அவரை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.

சீரியலிலும் இப்போது புதிய முல்லையின் காட்சிகள் தான் அதிகம் இடம்பெறுகின்றன. அண்மையில் அவர் இடம்பெற்று வந்த புரொமோ ரசிகர்களிடம் அதிகம் வைரலானது. தற்போது காவ்யா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் தனது தங்கையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் இவரது தங்கையா, அக்காவை போல இவரும் அழகாக உள்ளாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.