பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணீர்விட்டு அழுத கதிர்! அவரே வெளியிட்ட தகவல்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அணைத்து சீரியல்களை மிகவும் பிரபலம். அதிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் படு பிரபலம். அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக ஒளிபரப்பபட்டு வருகிறது. இந்த தொடரில் கதிர் மற்றும் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜோடி தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்ற ஜோடியாக இருந்து வருகின்றனர்.

   

இதில் மிகவும் முக்கியமான கதிர் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சின்னத்திரை நடிகர் குமரன். சீரியலில் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பது மக்களின் யோசனையாக உள்ளது. அடுத்தடுத்து இந்த சீரியலில் நடிக்கும் சில பிரபலங்கள் குறித்து ஏதாவது செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் கூட நடிகர் குமரன் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார் என்றும் செய்திகள் வெளிவந்தன.

இந்த சீரியலை தாண்டி வேறு எதிலும் குமாரனை பார்க்க முடியாது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்மையில் தனது வாழ்க்கையில் நடந்த விஷயங்களை நினைத்து கதிர் அழுவது போல காட்சியாம். அதைப்படிக்கும் போது கதிராக அந்த சீனிற்கு உயிர் கொடுக்க வேண்டும் என ஒரு முயற்சி எடுத்தாராம் குமரன். அப்படி என்ன செய்தார் என்பதை அவரே எழுதியுள்ளார்.