‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ஹேமாவாக நடித்து வரும் லிசா பற்றிய முக்கியமான தகவல் இன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் இருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டி பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. அந்த வகையில் சமீபத்திய பாரதி கண்ணம்மா எபிசோடுகள் அனைத்தும் பாரதி மற்றும் கண்ணம்மாவின் இரண்டு குழந்தைகளை மையமாக வைத்து நகர்ந்து வருகிறது.
இந்த சீரியலில் தற்பொழுது பாரதியை விட்டு விட்டு தனது அம்மா தான் கண்ணம்மா என்று உண்மையாய் அறிந்த ஹேமா கண்ணம்மாவுடன் வந்து சேர்ந்துள்ளார். இந்த சீரியலில் பாரதியின் குழந்தையாக ஹேமா என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருபவர் தான் லிசா.
ஜீ தமிழில் ஒளிபரப்பான ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலம் ஆனார். இதில் கிடைத்த பிரபலம் மூலமாக இவருக்கு சீரியல்கள் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதை தொடர்ந்து அவர் மெல்லத் திறந்தது கதவு, யாரடி நீ மோகினி போன்ற சீரியலில் நடித்துள்ளார்.
இவர் தன்னுடைய ஆறு வயதில் இருந்தே நடிக்க தொடங்கி விட்டார். தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் பாரதியின் மகளாக ஹேமா கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி கொண்டு வருகிறார்.
தற்பொழுது ஹேமா பற்றிய முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது இவர் மெல்ல திறந்தது கதவு சீரியலில் நடித்துள்ளார். இந்த சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்த வெங்கட்டுக்கு மகளாக நடித்துள்ளார். தற்பொழுது இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.