பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் கதிர் 6 வருடத்திற்கு முன் விஜய்யில் இந்த சீரியலில் நடித்துள்ளாரா? பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ

தமிழ் மக்கள் மத்தியில் சீரியல் தொடர்களுக் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.மேலும் சின்னத்திரை நடிகர் மற்றும் நடிகைகள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்களாக இருந்து வருகிறார்கள்.மேலும் அந்த வகையில் பல புது தொடர்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அந்த துறை நிறுவனங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்கள் லிஸ்டில் உள்ளது.தமிழிலேயே உருவாக்கப்பட்ட இந்த சீரியலை பல மொழிகளில் ரீமேக் செய்து வருகின்றனர், இந்த பெருமை விஜய் தொலைக்காட்சிக்கும் சீரியல் குழுவுக்கும் உள்ளது.

   

இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் காதல் மன்னனாக வலம் வருபவர் கதிர் என்கிற குமரன்.சீரியலில் எப்போதும் அமைதியான ஒருவராக காணப்படுவார். கதிர் மற்றும் முல்லை கதாபாத்திரத்தை வைத்து ஏகப்பட்ட வீடியோக்கள் உருவாகி இன்ஸ்டாவில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

தற்போது கதிர் ரசிகர்கள் அவரது பழைய சீரியல் ஒன்றை நினைவுகூர்ந்துள்ளனர். குமரன் ஒரு 6 வருடத்திற்கு முன் விஜய்யின் ஹிட் சீரியலில் நடித்துள்ளார்.

செந்தில்-ஸ்ரீஜா நடித்த மாப்பிள்ளை சீரியலில் தான் குமரன் நடித்துள்ளார். குமரனின் அந்த சீரியல் லுக் புகைப்படங்களை தான் ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.