பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாக்கு கிடைத்த அங்கீகாரம்! மகிழ்ச்சியில் அவர் செய்த செயலை பாருங்க..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அணைத்து சீரியல்களை மிகவும் பிரபலம். அதிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கென்று ஓர் பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக ஒளிபரப்பபட்டு வருகிறது. தமிழில் பெரிய ஹிட்டாகியுள்ள இந்த சீரியல் தற்போது ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என முக்கிய மொழிகளிலில் ரீமேக் செய்துள்ளனர்.

   

இந்த தொடரில் கதிர் மற்றும் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜோடி தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்ற ஜோடியாக இருந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபலங்கள் அனைவருக்கும் ரசிகர்கள் அதிகம், இதில் நடிக்கும் சுஜிதா தனக்கென தனி யூடியூப் சேனல் வைத்து, அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் குறித்து பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் இத்தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமாவும் தனியாக யூடியூப் சேனல் தொடங்கி, பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். ‘ஹேமாஸ் டைரி’ என்ற அந்த சேனலுக்கு யூடியூப் சார்பில் ‘சில்வர் ப்ளே பட்டன்’ (Silver Play Button) கிடைத்துள்ளதால் இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவரும் நன்றி தெரிவித்துள்ளார் நடிகை ஹேமா.