பார்ட்டியில் நடிகர் ஜெயம் ரவி மனைவியுடன் சண்டை போட்டாரா நடிகர் தனுஷ்? காரணம் என்ன? வெளியான தகவல்

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராகி இருப்பவர் நடிகர் தனுஷ். காதல் கொண்டேன், திருடா திருடி, புதுப்பேட்டை, பொல்லாதவன், ஆடுகளம், 3 , வேலையில்லா பட்டதாரி, அசுரன் போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தமிழ் மொழி திரைப்படங்களிலும் மற்றும் இந்தி திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

நடிகர் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தி மற்றும் தனுஷ், நடிகை த்ரிஷா என நண்பர்கள் இணைந்து பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர். அதன் புகைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த புகைப்படத்தில் நடிகர் தனுஷ், நடிகர் ஜெயம் ரவியின் மனைவியிடம் சண்டை போடுவதுபோல இருக்கிறது என சமூக வளைத்ததில் கூறப்பட்டது.

இந்நிலையில் அங்கு என்ன நடந்தது என்று தகவல் வெளியாகியுள்ளது. அந்த பார்ட்டி ஜெயம் ரவி நடிப்பில் சூப்பர்ஹிட்டான தனி ஒருவன் படத்தின் வெற்றியை கொண்டாட நடந்ததாம். அந்த பார்ட்டியில் சண்டை எதுவும் நடக்கவில்லையாம், நண்பர்களுடன் நடிகர் தனுஷ் எப்படி நடந்து கொள்வாரோ, அப்படி தான் அங்கு உரையாடல் சென்றது என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த புகைப்படத்தின் மூலம், எந்த ஒரு தவறான தகவல் பரப்பப்படாது என தெரியவந்துள்ளது.