பார்லே ஜி பிஸ்கட் புகைப்படத்தில் இருக்கும் குழந்தையின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. பார்லி ஜி என்று கூறியதும் நமக்கெல்லாம் முதலில் ஞாபகத்திற்கு வருவது அந்த பிஸ்கட்டும் அந்த பிஸ்கட் கவரில் இருக்கும் குழந்தைதான். அந்த குழந்தை யார் அவர்களுக்கு தற்போது என்ன வயதாகின்றது என்று ஒருமுறையாவது நாம் யோசித்து இருப்போம்.
சில வருடங்களுக்கு முன்பு பார்லி ஜி பிஸ்கட் கவரில் இருக்கும் குழந்தை இவர்தான் என்றும், நேரு தேஷ்பாண்ட் என்பவர் பற்றிய செய்திகள் வெளியாகி வைரலானது. 65 வயதுக்கு மேலான நேரு தேஷ்பாண்டே தாகூரை சேர்ந்தவர். இவர் 4 வயது இருக்கும் போது இவருடைய அப்பா எதர்ச்சியாக எடுத்த படம் தான் பார்லி ஜி பிஸ்கட்டில் இடம் பிடித்தது என்றும் கதைகள் உலா வந்தது.
ஆனால் இதற்கு பார்லிஜி நிறுவனம் ஒரு விளக்கம் அளித்தது .இது உண்மை இல்லை என்று கூறியது. எவரெஸ்ட் என்ற விளம்பர நிறுவனம் தான் பல வருடங்களாக பார்லேஜிக்கு புகைப்படங்களை தயாரித்துக் கொண்டிருக்கின்றது என்றும், அந்த நிறுவனம் 1960களில் உருவாக்கிய கற்பனை ஓவியம் தான் இந்த குழந்தை என்று அவர்கள் கூறியிருந்தது. உண்மையில் அப்படி யாரும் கிடையாது என்று தெரிவித்தது.
பார்லேஜி நிறுவனம் உலக அளவில் அதிக விற்பனை ஆகும் பிஸ்கட்டான பார்லேஜி ஒரு நாளைக்கு 40 கோடி பிஸ்கட்டுகளை தயாரிக்கின்றது. பல நாடுகளில் தயாரிப்பு ஃபேக்டரிகளை வைத்திருக்கும் இந்த நிறுவனம் தற்போது வரை பார்லே ஜி பிஸ்கட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றது. இந்த பிஸ்கட்டுகள் பெரும்பாலான 90 களுக்கு மிகவும் ஃபேவரட்டான தின்பண்டங்களில் ஒன்று ..