பாவாடை தாவணியில் லொஸ்லியாவின் கலக்கல் நடனம்! வாயடைத்துப்போன ரசிகர்கள்.. தீயாய் பரவும் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலே பிரபலமாகி விடலாம் என்ற அளவிற்கு இந்த பிக்பாஸ் நிழ்ச்சி அடுத்த கட்டத்தை எட்டியது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானவர் தான் லாஸ்லியா. இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்தது அனைவர்க்கும் தெரிந்த விஷயமே. இந்நிகழ்ச்சியின் மூலம் லாஸ்லியாவுக்கு ஓர் பெரிய ரசிகர் பட்டாளமே கிடைத்தது.

தற்போது லாஸ்லியா கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார், அதனை தொடர்ந்து இவர் பிக்பாஸ் சீசன் 4 வின்னரான ஆரியுடன் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்ட்டிவ்வாக இருந்து வரும் லாஸ்லியா தொடர்ந்து தனது புகைப்படங்கள் அல்லது வீடியோவை பதிவிட்டு வருகிறார். நடிகை லொஸ்லியா பாலிவுட் பாடல் ஒன்றுக்கு ஆடிய நடனத்தின் சிறு காட்சியை அவரே இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட காட்சியை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இதேவேளை, கிரிக்கெட் போட்டியாளர் ஹர்பஜன் சிங்குடன் லொஸ்லியா நடிக்கும் ஃபிரண்ட் ஷிப் படத்தின் புகைப்படங்கள் நேற்று சமூகவலைத்தளத்தில் வைரலானது. தற்போது கொள்ளை அழகுடன் தாவணியில் அவர் வெளியிட்ட காட்சியை பார்த்த ரசிகர்கள் ஒரே குஷியில் உள்ளனர். இதோ அந்த வீடியோ..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *