பிக்பாஸ் புகழ் நடிகை மதுமிதாவிற்கு குழைந்தை பிறந்தாச்சு… என்ன குழைந்த தெரியுமா..?

நடிகை மதுமிதா நடிகர் உதயநிதி ஸ்டாப்களின் அவர்களின் நடிப்பில் வெளியான ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் நடிகர் சந்தானத்தின் ஜோடியாக ‘ஜாங்கிரி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை மதுமிதா. சினிமாவிலும், சீரியல்களிலும் நடித்து வந்த நடிகை மதுமிதா அவர்கள், பிரபலமான ஒரு ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் சீசன் 3-ல் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்டார்.

   

மேலும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு சில காரணங்களால், சில நாட்கள் மீடியாவை விட்டு ஒதுங்கி இருந்தவர் சமீபத்தில்தான் திரும்பவும் படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். மேலும், சமீபத்தில் விஜய் சேதுபதி, டாப்ஸி நடித்த “அனபெல் சேதுபதி” படத்தில் நடித்திருந்தார். நடிகை மதுமீதாவுக்கும் அவரின் உறவினர் மோசஸ் ஜோயல் என்பவருக்கும்,

கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அதோடு, தாயும் சேயும் தற்போது நலமாக உள்ளனர் எனத் தெரிவித்திருக்கின்றனர். இவர்களுக்கு அவருடைய நபர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.