முன்பெல்லாம் கோடம்பாக்கத்தில் வாய்ப்பு கிடைத்து திரைப்படத்தில் தலைகாட்ட கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டும். ஆனால் இப்போதெல்லாம் அந்த நிலைமை மாறிவிட்டது. சோசியல் மீடியாக்களின் மூலம் ஒரே படத்தில் சான்ஸ் கிடைத்து இப்போதெல்லாம் பலரும் பேமஸாகி விட்டனர். அந்தவகையில் சேலை அணிந்து, கவர்ச்சி புகைப்படத்தால் அகில உலக பேமஸானவர் நடிகை ரம்யா பாண்டியன்.
ராஜூமுருகன் இயக்கத்தில் ‘ஜோக்கர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ரம்யா பாண்டியன், அதன் பின் ஆண் தேவதை படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் அதன் பின்னர் வாய்ப்புகள் எதுவும் வாய்க்கவில்லை. இதனால் தான் அம்மணி இடுப்பு போட்டோ வெளியிட்டார். அது சூப்பர், டுப்பர் ஹிட்டாகியும் பட வாய்ப்புகள் வரவில்லை. ஆனால் அது ரம்யா பாண்டியனுக்கு விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு வாங்கித் தந்தது.
தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் விஜய் டிவி வாய்ப்புக் கொடுத்தது. பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு டாப் 5ல் இடம்பிடித்தார். நடிகை ரம்யா பாண்டியன், நடிகர் அருண் பாண்டியனின் அண்ணன் மகள் என்பதை நாம் அறிவோம். ஆனால் இதுவரை ரம்யா பாண்டியன் அப்பாவின் புகைப்படம் வெளியானதில்லை. இந்நிலையில் முதல் முறையாக ரம்யா பாண்டியனின் அப்பா துரை பாண்டியனின் புகைப்படம், வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..