பிக்பாஸ் வீட்டில் திடீர் திருப்பம்…. இந்த வாரம் வெளியேறும் மக்களின் விருப்ப போட்டியாளர்…. ரசிகர்கள் ஷாக்….

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் 60 நாட்களைக் கடந்து தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முதலில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒவ்வொரு வாரம் எலிமினேஷன் செய்யப்பட தற்போது 11 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளன.

கடந்த வாரம் டபுள் எலிமினேஷன் நடைபெற்ற நிலையில் ராம் மற்றும் ஆயிஷா இருவரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த வாரம் அசீம், விக்ரமன், ஜனனி, ஏ டி கே,மணிகண்டன் மற்றும் ரக்ஷிதா ஆகிய 6 போட்டியாளர்கள் நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்ற நிலையில்,

திடீர் திருப்பமாக இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது ஏ டி கே என்ற தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரம் ஏடிகே நன்றாக பிக் பாஸ் வீட்டில் விளையாடி வந்த நிலையில் திடீரென அவர் வெளியேற்றப்படுவது பிக் பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.