பிக் பாஸ் சீசன் 5ல் பங்கேற்கும் குக் வித் கோமாளி பிரபலம்.. யார் தெரியுமா? கசிந்த தகவல்

விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகப்பெரிய பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். இந்நிகழ்ச்சிக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். கடந்த பிக் பாஸ் சீசன் 4 சமீபத்தில் முடிவடைந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 5 எப்போதும் துவங்கும் என்று தான் ரசிகர்களின் கேள்வி எழுந்துள்ளது. இதனால் வரும் ஜூன் மாதம் பிக் பாஸ் சீசன் 5 துவங்க வாய்ப்புகள் அதிகம் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

   

மேலும் இந்த பிக் பாஸ் சீசன் 5யை கமல் ஹாசனுக்கு பதிலாக நடிகர் சிம்பு தொகுத்து வழங்கவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். மேலும், இதற்கு போட்டியாளர்கள் மற்றும் தொகுப்பாளரை தேர்வு செய்ய மும்முறம் காட்டி வருவதாகவும் வெளியானது. அதே போல் மற்றொரு புறம், குக் வித் கோமாளி அஸ்வின், தர்ஷா, கனி, நடிகர் ராதாரவி, இனியன், உள்ளிட்ட பலருடன் போட்டியாளர்களாக கலந்து கொள்ள விஜய் டிவி பேச்சு வார்த்தை நடத்துவதாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த போட்டியாளர்களின் பட்டியலில், குக் வித் கோமாளி பிரபலம் சுனிதா பிக் பாஸ் 5ல் கலந்துகொள்ள அதிகம் வாய்ப்புகள் உள்ளதாகவும், பிக் பாஸ் குழு அணுகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் பலரும், கொண்டாட்டம் அடைத்துள்ளனர்.