பிக் பாஸ் சீசன் 5 இந்த வாரம் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேற போகும் அந்த போட்டியாளர் யார் தெரியுமா ..?

பிக்பாஸ் சீசன் 5 உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வெற்றிகரமாக ஓடுகிறது,இந்த நிகழ்ச்சி 94 நாட்களை கடந்து செல்லும் இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு பணத்தை வாரி இறைத்து கொடுத்து வருகின்றனர் பிக் பாஸ் குழுவினர் .அந்த பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேற நினைப்பவர்கள் வெளியேறலாம்.

முதலில் ரூ. 3 லட்சம், அடுத்து ரூ. 5 லட்சம் இப்போது ரூ. 7 லட்சம் வரை பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர் .அந்த பணத்தை யாருமே எடுக்கவில்லை என்பது போல் தெரிகிறது. காரணம் இப்போது வந்த புதிய புரொமோவில் பிக்பாஸ் புதிய டாஸ்க் கொடுக்க அதை போட்டியாளர்கள் செய்து வருகிறார்கள்.இந்த பணத்தை வாபாஸ் வாங்கிக்கொண்டது போல இருக்கிறது .

   

தற்போது இந்த வாரம் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போவது யார் என்ற பெரிய கேள்வி மக்களிடம் வந்துள்ளது உள்ளது.இதுவரை வந்த ஓட்டிங் லிஸ்டின் விவரத்தை வைத்து பார்க்கையில் தாமரை மற்றும் பாவ்னிக்கு குறைவான வாக்குகள் வந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது .