பிக் பாஸ் சீசன் 5 தொகுப்பாளர் கமல் இல்லையா? இனி அவருக்கு பதில் இந்த பிரபல நடிகர் தானாம்!!

விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகப்பெரிய பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். இந்நிகழ்ச்சிக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். மேலும் இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகர் ஆரி ரசிகர்களின் பேராதரவை பெற்று பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வென்றார், அவரை தொடர்ந்து பாலாஜி இரண்டாவது மற்றும் ரியோ ராஜ் மூன்றாவது இடத்தை பிடித்தனர். பிக் பாஸ் சீசன் 4 கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்த நிலையில் உடனடியாக பிக் பாஸ் சீசன் 5 எப்போது துவங்கும் என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

   

அதே போல் பிக் பாஸ் சீசன் 4 போல் இல்லாமல், கொஞ்சம் விறுவிறுப்பும், கொஞ்சம் நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றார்கள். மேலும் கமல் தொகுத்து வழங்கும் கடைசி சீசனாக இதுவாக அமையும் என ஒரு பக்கம் பேச்சு அடிபட்டது. அதற்கு காரணம் கமல் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதால் அவர் நிச்சயம் படு பிசியாக இருப்பார் என்பது தான்.

அதனால் இந்த சீசன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவாரா என்பது தான் கேள்வி. தொடர்ந்து நான்கு சீசன்களாக தொகுத்து வழங்கி வரும் கமல் ஹாசன் அடுத்து வரவிற்கும் 5ஆம் சீசனை தொகுத்து வழங்குவாரா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.