தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷெரின். இதன்பின் விசில், கோவில்பட்டி வீரலட்சுமி என சில படங்களில் மட்டுமே நடித்தாலும் மக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஷெரின். அப்படங்களுக்கு பிறகு தமிழ் திரையுலகில் வாய்ப்புகள் இல்லாததால் அவரை சினிமா பக்கமே காணவில்லை.
ஆனால் மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 3 கலந்துகொண்டார் நடிகை ஷெரின். இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மிகவும் ஒல்லியாக ஷெரினை பார்த்த ரசிகர்களுக்கு குண்டாகி ஆளே அடையாளம் தெரியாமல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஷெரினை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆனார்கள். ஆனால் இப்போது உடல் எடையை மொத்தமாக குறைத்து பழைய தோற்றத்திற்கு மாறிவிட்டார் ஷெரின்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் படங்கள் வாய்ப்புகள் இல்லையென்றாலும், தொடர்ந்து நிறைய போட்டோ ஷுட்டுகளாக நடத்தி வருகிறார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்து, ரசிகர்களை கவர்ந்த்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பட்டு புடவையில் திருமண கோலத்தில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் ” பொண்ணு ரெடி மாப்பிள்ளை எங்கே ” என விளையாட்டாக பதிவு செய்துள்ளார் ஷெரின்.
View this post on Instagram