பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஆயிஷாவின் மொத்த சம்பளம் இவ்வளவா?…. அதிர்ச்சியில் வாயைப் பிளந்த ரசிகர்கள்….

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியேறிய ஆயிஷாவின் மொத்த சம்பளம் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 21 போட்டியாளர்களில் ஒருவர் சீரியல் நடிகை ஆயிஷா. இவர் கேரளாவில் பிறந்து வளர்ந்து பின் மாடலாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர்.  ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘சத்யா’ என்ற தொடரில் நடித்து வந்தார். இந்த தொடர் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு அளித்தது. இதன் மூலம் அவர் மிகப் பிரபலமானார்.

   

இந்த பிரபலத்தின் மூலம் இவர் பிக் பாஸ் வீட்டில் காலடி எடுத்து வைத்தார். பிக் பாஸ் வீட்டில் இவர் தானாக இருந்து, தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி காட்டினார். ஒவ்வொரு வாரமும் புது டாஸ்க் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பாக தங்களது விளையாட்டினை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் டபுள் எலிமினேஷன் என கமலஹாசன் அறிவித்திருந்தார்.

இதன்படி நேற்று முன்தினம் போட்டியாளர் ராம் பிக் பாஸ் வீட்டை விட்டு முதலில் வெளியேற்றப்பட்டார். அவரை தொடர்ந்து ஆயிஷா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் ஒரு நாளைக்கு இவருக்கு ரூபாய் 28 முதல் ரூபாய் 30 ஆயிரம் வரை பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனடிப்படையில் பார்க்கும் பொழுது 1கோடிக்கும் மேல் ஆயிஷாவிற்கு சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த சம்பள விவரங்கள் எவ்வளவு தூரம் உண்மை என்பது நமக்கு தெரியவில்லை.