பிக் பாஸ் வீட்டில் தனுஷ் பட பாடலுக்கு மாஸாக நடனமாடி அசத்திய ஜனனி… தீயாய் பரவும் வீடியோ இதோ….

பிக் பாஸ் வீட்டில் ஒலிக்கப்பட்ட தனுஷ் பட பாடலுக்கு ஜனனி நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது தற்பொழுது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் 8 போட்டியாளர்கள் வெளியேற, 13 போட்டியாளர்களே பிக் பாஸ் வீட்டில் உள்ளன.ர் இவர்களுக்கிடையே சண்டை, அன்பு, வெறுப்பு, காதல் என அனைத்து உணர்ச்சிகளும் காணப்படுகிறது.

   

 

இந்த நிகழ்ச்சி தற்பொழுது பாதி நாட்களை நிறைவு செய்துள்ளது. இதை தொடர்ந்து யார் வெற்றி பெறுவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் முந்தைய வாரம் ராபர்ட் மாஸ்டர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற அவரை தொடர்ந்து குயின்சி குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறினார்.

இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் காலையில் எழுந்தவுடன் வேக் அப் சாங் ஒளிபரப்பு செய்யப்படுவது வழக்கம். அந்த பாடலுக்கு போட்டியாளர்கள் அனைவரும் எழுந்து கார்டன் ஏரியாவில் வந்து நடனம் ஆடுவார்கள்.

அதே போல தனுஷின் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலுக்கு ஹவுஸ்மேட்ஷ் அனைவரும் நடனமாடுகின்றனர். இதில் குறிப்பாக ஜனனியின் நடனம் ஆனது ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ…