பிரபல சீரியலில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிக்பாஸ் ஆரி!! எந்த சீரியலில் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்

தொலைக்காட்சிகளில் ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பு பெற்றதில் விஜய் தொலைக்காட்சியும் ஒன்று. ரசிகர்களுக்கு ஏற்றார் போல் விதவிதமாக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். சீரியல், காமெடி, நடனம், பாடல், என பல வருடங்களாக மக்கள் மகிழ வைத்து வரும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இதில் ரசிகர்கள் மனதில் இருந்து இதுவரை நீங்காத நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்றால் கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், குக் வித கோமாளி, சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் என கூறி கொண்டே இருக்கலாம்.

   

லாக் டவுன் முன்பு ஏகப்பட்ட விஜய் தொலைக்காட்சியில் சீரியல்கள் டாப்பில் ஓடின. ஆனால் கொரோனா பிரச்சனையால் பல சீரியல்கள் அப்படியே நிறுத்தப்பட்டது, சில அதே பெயரில் வேறொரு கதையில் ஓடுகின்றன. இந்நிலையில் தற்போது பிரபல விஜய் டிவி சீரியல்கள் ஆன பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 சீரியல்களின் மஹாசங்கமம் நடந்து வருகிறது.

இதில் சிறந்த குடும்பம் யார் என்ற தலைப்பில் போட்டி ஒன்றை நடத்தி வருகின்றனர். அதில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் மக்களின் பேராதரவை பெற்று டைட்டிலை வென்ற நடிகர் ஆரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்…