பிரபல தொகுப்பாளினி அர்ச்சனாவா இது? ஆரம்பகால சினிமா பயணத்தின் போது எப்படி இருக்கிறார் பாருங்க! புகைப்படம் இதோ

சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி டைம், இளமை புதுமை எனும் நிகழ்ச்சிகள் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் அர்ச்சனா. ஆனால் விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது கலக்க போவது யார் நிகழ்ச்சி தான் இவருக்கு தொகுப்பாளினி என பிரபலமடைய செய்தது. மேலும் தொடர்ந்து கடந்த 20 ஆண்டுகளாக நகைச்சுவை கலந்த தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடத்தில் மிகவும் பிரபலமானவர் தொகுப்பாளினி அர்ச்சனா.

   

எல்லா தொலைக்காட்சிகளுக்கும் ஒரு வலம் வருகிறார் தொகுப்பாளினி அர்ச்சனா. சன், விஜய், ஜீ தமிழ் இப்போது மீண்டும் விஜய் என மாறி மாறி தொலைக்காட்சிகளில் பணிபுரிந்து வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் தனது வேலையை தொடங்கியுள்ளார். காதலா காதலா என்ற ஷோவை தொகுத்து வழங்கிய அவர் Old Is Gold என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

அடுத்தடுத்தும் இவரிடம் நிறைய நிகழ்ச்சிகளை ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். இந்த நேரத்தில் தான் அர்ச்சனா தனது பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது தனது ஆரம்பகட்ட சினிமா பயணத்தின் போது ஒரு அட்டை படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அப்புகைப்படத்தை ஷேர் செய்து பழைய விஷயங்களை நினைவு கூர்ந்துள்ளார்.