பிரபல நடிகரின் மனைவி தற்கொலை… திருமணமான ஒன்றரை ஆண்டில் ஏற்பட்ட விபரீதம்..

திருமணமான ஒன்றரை வருடத்தில் மலையாள நடிகர் உன்னி தேவ் மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல மலையாள நடிகர் உன்னி தேவ், மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்த இவருக்கும், பிரியங்கா என்ற பெண்ணிற்கும் 2019ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

   

இவர்கள் எர்ணாகுளம் பகுதியில் வசித்து வந்த நிலையில், இருவருக்குள்ளும் சில தகராறு இருந்து வந்ததாகவும், அடித்து துன்புறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று உன்னியின் மனைவி பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொ.ண்டுள்ளார்.

மேலும் தற்கொலைக்கு முந்தைய நாள் கணவர் கொடுமைப்படுத்துவதாக பிரியங்கா காவல் நி.லையத்தில் புகார் அளித்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும், “அவரது உடலில் காயம் இருந்ததாகவும் பிரியங்காவை அவரது கணவர் உன்னி அடித்துத் துன்புறுத்தியதாகவும்” பிரியங்காவின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தற்போது பொலிசார் உன்னி தேவ்-யிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.