பிரபல நடிகர் சந்தானத்தின் உறவுக்கார பெண் கொலை..! – வெளியான அதிர்ச்சி தகவல்..

நடிகர் சந்தானத்தின் தூரத்து உறவினரான ஜெயபாரதி என்ற பெண் திருவாரூர் கிடாரங் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.

   

இவருக்கும் அமெரிக்காவில் வேலை பார்த்த விஷ்ணு பிரகாஷ் என்பவருக்கும் கடந்த 2005ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களக்கு ஒரு பெண் குழந்தையும் இருந்துள்ளது.

இந்நிலையில் திருமணத்திற்கு பின்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜெயபாரதியின் தாய் வீட்டிற்கு அவரது கணவர் விட்டுச் சென்றுள்ளார்.

அமெரிக்காவிலிருந்து சொந்த ஊருக்கு வந்த ஜெயபாரதிக்கு சொந்த ஊரிலேயே அஞ்சல் துறையில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய நிலையில், ATM_ல் பணம் நிரப்ப செல்லும் வாகனத்தில் மோதி உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.

பொலிசார் இது குறித்து விசாரித்த போது, சம்பவத்தினை நேரில் பார்த்தவர்கள், இந்த விபத்து திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது போன்று இருப்பதாக கூறிய நிலையில், ஜெயபாரதியின் உறவினர்கள் கணவர் விஷ்ணு பிரகாஷ் மீது சந்தேகமடைந்து புகார் அளித்துள்ளனர்.

விபத்து ஏற்படுத்திய காரை சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டு பிடித்து, பொலிசாரிடம் ஆதாரமாக கொடுத்தும் வழக்கை விசாரிப்பதில் தாமதம் காட்டிதால், நடிகர் சந்தானத்தின் உதவியை நாடியுள்ளனர்.

சந்தானம் கூறிய பின்பு, தனிப்படை அமைத்து காவல் துறையினர் விசாரணையைத் துவக்கியுள்ள நிலையில், ஜெயபாரதி தனது கணவரின் அலுவலகத்திற்கு விவாகரத்து நோட்டீஸை அனுப்பியுள்ளதும்,

இதனால் கணவரின் வேலைக்கு இடையூறு ஏற்பட்டதால், கணவர் வீட்டினர் ஜெயபாரதியிடம் புகாரை வாபஸ் வாங்க கூறி மிரட்டியுள்ளது அம்பலமாகியுள்ளது.

புகாரை வாபஸ் வாங்க மறுத்ததால், ஆத்திரமடைந்த விஷ்ணு பிரகாஷ் கூலிப்படையை ஏவி ஜெயபாரதி திட்டம் போட்டு காரை ஏற்றி கொன்றுள்ளார் என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.