பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோ மாளி, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமாகி விடுவார்கள்.
அந்த வகையில் நடந்து முடிந்த குக் வித் கோ மாளி சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் அஸ்வின்.
இவர் தற்போது தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார், அந்த வகையில் தனது அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்தும் அஸ்வின் அறிவித்து வருகிறார்.
இந்நிலையில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் அஸ்வின் ஹீரோவாக ஒரு திரைப்படத்தில் நடிக்கவிருந்தார், இப்படத்தை ரைஸ் ஈஸ்ட் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.மேலும் தற்போது அப்படத்தில் முக்கிய மாற்றம் ஒன்று நடந்துள்ளது.
ஆம், அஸ்வினுக்கு பதிலாக தற்போது நடிகர் காளிதாஸ் அப்படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் இவர் நடிப்பில் OTT-யில் வெளியான திரைப்படங்கள் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.