பிரபல பாலிவுட் நடிகையுடன் நடிகர் விஜய் சேதுபதி…. இணையத்தில் படு வைரலாகும் புகைப்படம் இதோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. முன்னணி ஹீரோவாக வளம் வந்தாலும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பார். சமீபத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சாந்தமாகவும், மற்றொரு பக்கம் விக்ரம் படத்தில் மிரட்டும் வில்லனாகவும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். அது மட்டுமல்லாமல் பேட்ட, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற படங்களில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.

   

இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்திய அளவில் அனைவரிடமும் கவனத்தை ஈர்த்து வருகிறது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் செம்ம பிசியான நடிகராக விஜய் சேதுபதி வலம் வருகிறார். அவ்வகையில் இந்தியில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் merry Christmas. இந்த படத்தில் நடிகை கத்ரீனா கைஃப் அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் இருவரும் அப்படத்தின் காட்சிக்காக தயாராகி வரும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது…