காமெடி நடிகரான மதுரை முத்து தற்பொழுது பிரம்மாண்டமாக கெஸ்ட் ஹவுஸ் ஒன்றை கட்டி வருகிறார் இது தொடர்பான வீடியோவை அவரே தனது youtube சேனலில் பதிவு செய்துள்ளார்.
மதுரை முத்துவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு சின்னத்திரையில் ஸ்டாண்ட் அப் காமெடி செய்து மிகவும் பாப்புலரான ஒருவராக இருந்து வருகிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமானார்.
இதைத்தொடர்ந்து தன்னுடைய பட்டிமன்ற பேச்சால் அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறார். பல நேரங்களில் இவர் பேச்சும் பேசுங்கள் டைமிங் காமெடியாக இருப்பதால் ரசிகர்கள் தங்களுடைய மனக்கவலையை மறந்து வாய்விட்டு சிரித்து வருகிறார்கள்.
தற்பொழுது இவர் பல பொது நிகழ்ச்சிகளிலும் விருந்தினராக கலந்து கொள்கிறார். இதன் மூலமும் சம்பாதித்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க தற்பொழுது மதுரை முத்து சொந்த youtube சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
இதில் அவர் தற்பொழுது அதிக பணம் செலவு செய்து பிரம்மாண்டமாக தான் கட்டி வரும் கெஸ்ட் ஹவுஸை ஹோம் டூர் செய்து அதன் வீடியோவை வெளியிட்டுள்ளார். விருந்தினர்கள் தங்குவதற்காக வேண்டி சிறப்பாக அந்த கெஸ்ட் ஹவுஸை கட்டி வருவதாகவும் அவர் இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
இதோ அந்த கெஸ்ட் ஹவுஸின் புகைப்படங்கள்….