விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அணைத்து சீரியல்களை மிகவும் பிரபலம். அதிலும் பாரதி கண்ணம்மா சீரியல் தான் டாப்பில் உள்ளது. சின்னத்திரை சீரியலில் TRPயின் உச்சத்தில் இருக்கும் முன்னணி சீரியல் பாரதி கண்ணம்மா. இதில் கதாநாயகனாக பாரதி கதாபாத்திரத்தில் அருண் என்பவர் நடிக்க, அறிமுக நடிகை ரோஷினி கதாநாயகியாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த சீரியல் கண்ணம்மா என்ற பெண்ணை சுற்றியே நடக்கிறது. சீரியலில் பாரதி-கண்ணம்மா இருவரும் எப்போது இணைவார்கள் என்பது தான் ரசிகர்களின் ஏக்கம். அந்த சீரியலில் பக்காவான குடும்பக் குத்துவிளக்காகவும், மேக்கப்பே இல்லாமல் கருப்பாகவும் வலம்வருவார் கண்ணம்மா. தற்போது TRP முதல் இடம் பிடிக்க பல பாராட்டுக்கள் சீரியல் குழுவினருக்கு கிடைத்துள்ளது. இதனால் சீரியல் குழுவினர் செம குஷியில் உள்ளனர்.
அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்க ரசிகர்களும் ஆவலாக உள்ளனர். இந்த சீரியலில் புதிய என்ட்ரீயாக நிறைய பிரபலங்கள் நடிக்கின்றனர். அதில் ஒருவர் தான் நடிகை நீபா, இவரை சுற்றிய கதை தான் கடந்த சில நாட்களாக காட்டப்பட்டது. தற்போது நீபா புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளாராம். புதிய காருடன் நின்று அவர் எடுத்த புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
View this post on Instagram