பூமி மீது 25 மீட்டர் அகலத்திற்கு திடீர் பள்ளம்…. காரணம் என்ன?…. வெளியான திடுக்கிடும் தகவல்…!!!!!

தென் அமெரிக்க நாடான சிலியில் 25 மீட்டர் அகலத்திற்கு திடீரென உருவான மிகப்பெரிய பள்ளம் குறித்து புவியியல் வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். டைரா அமரில்லா என்ற பகுதியில் காப்பர் சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. அங்கு நேற்று திடீரென மிகப் பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

அந்த நாட்டின் தலைநகர் சண்டி கோவிலில் இருந்து சுமார் 665 கிலோமீட்டர் தொலைவில் காப்பர் சுரங்கம் அமைந்துள்ளது. அந்த காப்பர் சுரங்கத்தின் மையப் பகுதியில் 82 அடி அகலத்திற்கு திடீரென ஒரு துளை உருவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து புவியியல் மற்றும் சுரங்க நிபுணர் குழுக்கள் அந்த இடத்திற்கு விரைந்தனர். அந்தத் துளையின் ஆழத்தில் ஏதாவது உள்ளதா என்று ஆராய்ச்சிகள் நடத்தினர். ஆனால் அந்த துளையில் வெறும் தண்ணீர் மட்டுமே இருந்துள்ளது.அப்பகுதிக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த துளை உருவானதால் யாருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இந்தத் துளை ஏற்பட்ட 600 மீட்டர் தூரத்தில் ஒரு வீடு மட்டும் இருந்துள்ளது. இந்த சம்பவம் பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அப்பகுதியில் திடீரென பள்ளம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து புவியியல் வல்லுநர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.