பெற்றோர் கூறிய ஒற்றை வார்த்தை… மாணவி எடுத்த விபரீத முடிவு!! சோகத்தில் குடும்பத்தினர்!!

தமிழகத்தில் மொபைல் போன் பயன்படுத்திய கல்லூரி மாணவியை பெற்றோர்கள் திட்டியதால் தற்கொலை செய்துள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடி கீழத்தெருவைச் சேர்ந்த தம்பதி போதும்மணி – பத்மா தேவி. இவர்களது 19 வயது மகள் மதுரையில் தனியார் பொறியில் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

   

தற்போது ஊரடங்கு என்பதால் கல்லூரி இல்லாமல் வீட்டில் இருந்த மாணவி, அடிக்கடி மொபைல் போன் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் பெற்றோருக்கும் மாணவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று சாப்பிடாமல் அதிக நேரம் செல்போனை உபயோகித்ததால், ஆத்திரமடைந்த பெற்றோர் மாணவியை திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி தனியாக இருந்த தருணத்தில், தனது உடம்பில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

வீட்டின் மேற்கூரையிலிருந்து புகை வரத்தொடங்கியதால், அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து வீட்டின் அருகே சென்ற போது அலறல் சத்தம் கேட்டுள்ளது.

உடனே கதவை உடைத்து உள்ளே சென்று எரிந்த நிலையில் இருந்த மாணவியை மீட்டு ஆம்புலன்ஸிற்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதம் ஆனதால் குறித்த மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தற்போடு உடலை உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்துள்ள பொலிசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.