சினிமா துறையில் பல நடிகைகள் பல ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக இருந்து வருகிறார்கள்.மேலும் ஒரு படத்தில் பிரபலமான நடிகர்கள்,நடிகைகள்,காமெடி நடிகர்கள் மட்டுமே மக்களுக்கு பரிச்சியமாகி பிரபலமடைந்து வருகிறார்கள்.
மேலும் துணை நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் ரசிகர்கள் இருப்பதில்லை.மேலும் அந்த வகையில் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு நடிகையாக ஆனவர் நடிகை சரண்யா நாக்.இவர் காதல் கவிதை மற்றும் நீ வருவாய் என என்னும் படங்களில் மூலம் அறிமுகமானார்.
அதன் பின்னர் எனக்கு 20 உனக்கு 18 என்னும் படத்தில் துணை நடிகையாக நடிக்க தொடங்கினர்.மேலும் இவர் மக்கள் மத்தியில் பிரபலமடைய காரணமாக இருந்த படமான 2004 ஆம் ஆண்டு பரத் மற்றும் சந்தியா நடிப்பில் ஹிட்டான திரைப்படமான காதல் படத்தில் சந்தியா அவர்களுக்கு தோழியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
பிறகு இவர் படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைத்து தமிழ் மற்றும் தெலுங்குவிலும் சில படங்களை நடித்துள்ளார்.மேலும் இவர் ஜெயம்ரவி படமான பேராண்மை படத்தில் ஐந்து பெண்களின் ஒருவராக இவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் நடித்த கடைசி படமான ஈர வெயில் என்னும் படத்தில் நடித்ததன் பிறகு இவர் சினிமா துறையில் எந்த ஒரு படமும் நடிக்கவில்லை.தற்போது நடிகை சரண்யா நாக் அவர்களின் சமீபத்திய புகைப்படமானது இணையவாசிகள் கண்ணில் சிக்கியுள்ளது.அந்த புகைப்படம் கீழே உள்ளது.